உதவி காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு கைவிலங்கோடு தப்பிச் சென்ற ரவுடிகள் 3 பேரில் ஒருவன் கைது

0 1989
சென்னை வியாசர்பாடியில் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து கைவிலங்கோடு தப்பிச் சென்ற ரவுடிகள் 3 பேரில் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

சென்னை வியாசர்பாடியில் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து கைவிலங்கோடு தப்பிச் சென்ற ரவுடிகள் 3 பேரில் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த கிட்டா என்கிற அஜித்குமார், அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்து போலீசார் லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர்.

உதவி ஆய்வாளர் ஆனந்த் மட்டும் பணியில் இருந்த நிலையில், அஜய் புத்தாவும், கிட்டா அஜித்தும் லாக்கப்புக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது போல் நடித்து கண்ணாடியை உடைத்து தாக்கிக் கொள்ள முயன்றுள்ளனர்.

விபரீதம் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உதவி ஆய்வாளர் ஆனந்த் லாக்கப்பை திறக்கவே, அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மூன்று ரவுடிகளும் தப்பினர். இது குறித்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ஜெகதீஸ்வரனை எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு ரவுடியான அஜய் புத்தா போலீசாரிடம் சரணடைவதாக தனது வழக்கறிஞர்கள் மூலம் சரண்டர் வீடியோ வெளியிட்டுள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments