கரூரில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர்
கரூரில் 152 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கரூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன நகரியத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித் தாள் நிறுவனம் சார்பில் இந்த கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைத்திட, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில், இத்தாலியில் இருந்து உபகரணங்கள் இறக்குமதி செய்து நிறுவப்பட்டுள்ளன. கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட மருத்துவமனைகளுக்கு, இங்கிருந்து ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments