லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெறக் கோரிக் கேரளச் சட்டப்பேரவையில் தீர்மானம்
லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திக் கேரளச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா பட்டேல், சீர்திருத்தம் என்ற பெயரில் மதுவிடுதிகளை நடத்த அனுமதிப்பது, குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை லட்சத்தீவு மக்கள் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் லட்சத்தீவு மக்களின் நலனைக் காக்கும் வகையில் நிர்வாகியைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேரளச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மக்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Comments