கொரோனா சிகிச்சைக்கு குறைந்த வட்டியில் 5 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனுதவி..!

0 8026
பொதுத்துறை வங்கிகள் மூலமாக கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடனுதவி வழங்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகள் மூலமாக கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடனுதவி வழங்கப்படுகிறது.

5 ஆண்டுகளில் இக்கடனைத் திருப்பி செலுத்தலாம். ஆண்டுக்கு 8 புள்ளி 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உத்தரவாதமில்லாத கடன் என்றும் பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

இதே போன்று கொரோனா சிகிச்சை மையங்கள், பரிசோதனைக் கூடங்கள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உற்பத்தியாளர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள் போன்றோருக்கும் கடனுதவி வழங்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனைகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கவும் பொதுத்துறை வங்கிகள் முன்வந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments