தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் சரிவு
முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதால், தமிழகத்தில் கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு, கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. ஒரே நாளில் பெருந்தொற்றில் இருந்து 32 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 493 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 3 ஆயிரத்து 537 பேருக்கும், சென்னையில் 2ஆயிரத்து 689 பேருக்கும், ஈரோட்டில் ஆயிரத்து 784 பேருக்கும், திருப்பூரில் ஆயிரத்து 496 பேருக்கும், செங்கல் பட்டில் ஆயிரத்து 194 பேரும், திருச்சியில் ஆயிரத்து 128 பேருக்கும், கன்னியாகுமரியில் 912 பேருக்கும், திருவள்ளூரில் 887 பேருக்கும், மதுரையில் 792 பேருக்கும், புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 5 ஆயிரத்து 546 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Comments