மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவ ரூ. 2 கோடி வரை கடன் வழங்கப்படும் : மத்திய அரசு
மருத்துவமனை வளாகங்களிலேயே ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஏழரை விழுக்காடு வட்டியில் இரண்டு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஆண்டுக்கு ஏழரை விழுக்காடு வட்டியில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்க முழு உத்தரவாதத்தை மத்திய நிதியமைச்சகம் வழங்கும். அவசரக்காலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின்படி பெறும் கடனை நான்காண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.
முதலாண்டில் வட்டியை மட்டும் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த மூன்றாண்டுகளில் முதலுடன் வட்டியையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments