கொரோனா மருத்துவமனையில் புதிதாக 300 ஆக்சிஜன் படுக்கைகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

0 2487

ரோடு மாவட்டம் பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 300- படுக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

பெருந்துறை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் உள்ள 380 ஆக்ஸிஜன் படுக்கைகளும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டன.

இதனால் புதிதாக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் அவசர ஊர்தியில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் முதற்கட்டமாக ஆக்சிஜன் வசதிகொண்ட 300 படுக்கைகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ள முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம்,சாமிநாதன், முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.

ஆய்வைத் தொடர்ந்து பெருந்துறை அரசு கொரோனா மருத்துவமனையில் பணியாற்ற 5 மருத்துவர்கள் மற்றும் 5- செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து திருப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 100 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் அருகில் உள்ள கொரோனா  சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வசதியாக கார் ஆம்புலன்ஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments