கோயம்பேடு சந்தை இன்று திறப்பு - வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சந்தையில் காய்கறிகள் விற்பனை
வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வார விடுமுறை நாளான இன்று கோயம்பேடு சந்தை செயல்பட்டது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது.
பகல் 12 மணி வரை கடைகள் செயல்பட வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து மினி வேன், ஆட்டோ, 3 சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழம் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே அனுப்பப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
Comments