வாடகைக்கும், இ.எம்.ஐ க்கும் அரசிடமிருந்து வழி பிறக்குமா.? எதிர்பார்ப்பில் காத்திருக்கும் மக்கள்.!

0 7006

மிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் வீட்டு வாடகையை நினைத்தும், நடுத்தர வர்க்கத்தினர் தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கு செலுத்த வேண்டிய இ.எம்.ஐ குறித்தும் கவலையுடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர். ஊரடங்கு நேரத்திலும் தடையின்றி வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்கள் கழுத்தை நெரிப்பதாக பாதிக்கப்பட்டோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் அத்தியாவசியம் தவிர்த்து அனைத்து கடைகளும், தொழில்களும் செயல்படாமல் முடங்கியுள்ளன. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நிவாரணமாக ரேசன் கார்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மக்களின் தேவையறிந்து 13 விதமான மளிகைப் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை வைத்தும் கடன் வாங்கியும் வீட்டுத்தேவையை ஓரளவு கொண்டு செலுத்தி விடலாம் என்றாலும் மாதம் முதல் தேதியில் இருந்து 5 ந்தேதிக்குள் அலாரம் வைத்தாற்போல் வந்து நிற்கும் வீட்டுவாடகை, தனி நபர் கடன் மற்றும் இருசக்கரவாகன கடன் வீட்டுக்கடன் இ.எம்.ஐ தொகையை எப்படி கட்டப் போகிறோம் என்று தெரியாமல் நடுத்தர வர்க்கத்தினர் கையைப் பிசைந்து கொண்டு இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க நாடுதழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டுவாடகை தொடங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தவணைத் தொகை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை அது போன்றதொரு அறிவிப்பு இல்லாததால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையான நிதிச்சுமையில் தவித்து வருகின்றனர்.

கிராமப்புறங்களில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஊரடங்கையும் மீறி வீடு வீடாக சென்று அடாவடியாக வட்டியை வசூலித்து வருவதாக பாதிப்பட்டவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தவணைத் தொகையை கட்ட முடியாது என்று கூறவில்லை என்றும் கால அவகாசமாவது வேண்டும் எனவும் கேட்கின்றனர் ஊரடங்கால பணி பாதிப்பு மற்றும் வருமானம் இழந்தோர்.

கடந்த ஆண்டு பல நல்ல உள்ளம் படைத்த வீட்டு உரிமையாளர்கள் மாத வாடகையை விட்டுக் கொடுத்தனர். இதற்கெல்லாம் மேலாக தாங்கள் பூட்டிபோட்டிருக்கும் கடைக்கு வாடகை கொடுப்பது எப்படி என்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்

வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும், தங்களுக்கு வாடகையில் தள்ளுபடியோ கால அவகாசமோ கிடைத்தால் இந்த நேரத்தில் உதவியாக இருக்கும் என்று அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments