இந்தியாவில் வேகமாக சரியும் கொரோனா பாதிப்பு : மூன்று வாரங்களில் தினசரி எண்ணிக்கை பாதியாகக் குறைவு

0 7551

டந்த மூன்று வாரங்களில் நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட மூன்று வாரங்களில் கணக்கிடப்பட்டதில் இந்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

முதல் அலை உச்சத்தில் இருந்து பாதியாகக் குறைய ஆறு வாரங்கள் எடுத்தது. ஆனால் இரண்டாவது பேரலை கொரோனா எழுந்து மூன்று வாரங்களுக்குள் பாதியாகக் குறைந்திருப்பது மருத்துவத்துறையினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தைவிடவும் குறைவாக சரிந்தது.

ஆனால் தினசரி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அந்தளவுக்கு வேகமாகக் குறையவில்லை. உச்சத்தைத் தொட்ட கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மரண எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மே 16ம் தேதி 4 ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று 3 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments