பல்லடம் போலீசாரின் பேக்கரி டீலிங் தெரியுமா ? பேக்கரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்.!

0 27876

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு பிரட் தயாரித்துக் கொடுப்பதாக  நாடகமாடி மிக்சர் முருக்கு என நொறுக்கு தீணிகளை தயாரித்து விற்ற பேக்கரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

பல்லடத்தில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுமருத்துவமனை எதிரே திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான ஆரியாஸ்பேக்கரி என்ற கடை ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி இயங்கிவருவதாக பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த பேக்கரிகடைக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பல்லடம் அரசுமருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி இருப்பவர்களுக்கு பிரட் மற்றும் சுடுதண்ணீர் வழங்குவதற்காக அனுமதி பெற்று கடையை திறந்து வைத்திருப்பதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் அனுமதி கடிதத்தை கேட்ட பொழுது அங்கிருந்தன் ஊழியர்கள் அனுமதிகடிதத்தை கொடுக்கவில்லை. மேலும் அரசுமருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட் , சுடுதண்ணீர் தயார் செய்து கொடுப்பதாக நாடகமாடி மிக்சர்,முறுக்கு, கூல்டிரிங்ஸ், கிரீம் கேக் உள்ளிட்ட உணவு பண்டங்களை விற்பனை செய்தது அம்பலமானது. நொறுக்குதீனியை வாங்குவதற்கு மக்கள் கூடதொடங்கினர்

ஊரடங்குகாலத்தில் கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினரும் அந்தபேக்கரிகடையில் இனாமாக உணவுபொருட்களை வாங்கிச்சென்றதால் அந்த கடை தடையின்றி இயங்கி வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்தகடையை இழுத்து பூட்டிசீல்வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேக்கரிகள் சில போலீசாருடன் ரகசிய டீலிங் வைத்துக் கொண்டு நோயாளிகளுக்கு பிரட் தயாரிப்பதாக கூறி நொறுக்குதீனிகளை தயாரித்து விற்று வருவது தொடர்வதால் ஜனங்களின் நடமாட்டமும் தொடர்கின்றது. ஊரடங்கை மதிக்காமல் இந்த கடைகளை போல திருட்டுத்தனமாக இயக்கப்படும் தொழிற்சாலைகளாலும் நம்மவர்கள் அதிகமாக வெளியில் சுற்றித்திறிவதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments