கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருச்சி உட்பட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தடை - தமிழக அரசு

0 25401

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு , திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் வரும் 7 ஆம் தேதி வரை  செயல்பட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடபட்டுள்ள அரசாணையில், தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் , அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கோவை, திருப்பூர் , சேலம், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஏற்றுமதி நிறுவனங்கள், செயல்பட தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments