குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் ; பாராட்டுகிறேன் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

0 3190

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலனுக்காக நிதியுதவித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

அவர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் காக்கக் ‘கண்மணிகளைக் காப்போம்’ எனத் தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாகக் கோரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இக்குழந்தைகளின் பெயரில் 5 லட்ச ரூபாய் வைப்புநிதி செலுத்துவதுடன், படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments