தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 50 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன - அமைச்சர் சேகர் பாபு

0 2870

கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 50 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் உள்ள திராவிடர்க் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேவையான மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் கோரோனா நோயாளிகளை அவர்களே குணப்படுத்துவதால் சித்த மருத்துவ மையங்களுக்கு பரிந்துரை செய்வது இல்லை என்றார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் சொத்துக்கள்,ஆபரணங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து வெளிப்படையாக அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments