சிக்கன், முட்டையை இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு காவல் ஆணையருக்கு கால்நடை துறை முதன்மை செயலர் கடிதம்
ஊரடங்கு காலத்தில் சிக்கன், முட்டைகள் ஆகியவற்றை இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கோபால் கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவில், வேளாண் விளை மற்றும் இடுபொருட்களை ஊரடங்கு காஙத்தில் கொண்டு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது. சிக்கன், முட்டை போன்றவையும் இந்த பிரிவில் வருவதால் அவற்றையும் கொண்டு செல்ல அனுமதி உள்ளது என அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி உணவகங்களில் இருந்து உணவு வகைகளை இ-காமர்ஸ் மூலம் விற்கவும் அனுமதி உள்ளது. எனவே இது போன்று முட்டை-சிக்கனை விற்கவும் அனுமதிக்குமாறு கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே உணவகங்களிலும், தேவையான இடங்களிலும் உணவு தயாரிக்க உதவும் வகையில் முட்டை மற்றும் சிக்கனை இ காமர்ஸ் முறையில் தடையின்றி கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments