பீகாரில் மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர் - நோயாளிகள் அவதி

0 2494

பீகாரில் உள்ள கத்தியார் நகர சதார் மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது.

யாஸ் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் மழை நீர் பெருகி சாலைகளில் இருந்து மருத்துவமனைக்குள் புகுந்தது. நோயாளிகளின கட்டில்களுக்கு கீழே குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.

மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் நீரில் மிதந்தன. சாலையில் கழிவு நீர் வடிகால்கள் மோசமான நிலையில் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழை நீரால் நோய்த்தொற்றுகள் பரவலாம் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments