கொரோனா தடுப்பூசிகளுக்காக ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை
கொரோனா தடுப்பூசிகளுக்காக ஃபைஸர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது இந்தியா நோய்த் தடுப்புக்காக 3 விதமான தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் மருந்துகளின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி சில தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
Comments