5ஜி இணையதள வசதியை உருவாக்கும் சோதனைக்காக அலைக்கற்றையை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கியது மத்திய அரசு
5ஜி இணையதள வசதியை உருவாக்கும் சோதனைக்கான அலைக்கற்றையைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 700 மெகா ஹெர்ட்ஸ், 3.3-3.6 ஜிகா ஹெர்ட்ஸ், 24.25-28.5 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகிய அலைநீளம் கொண்ட அலைக்கற்றைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். அவற்றைக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் 5ஜி சோதனைகள் சுமார் 6 மாத காலம் ஆய்வுக்ள நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments