பாதுகாப்புப் பிரச்சனையால் 2000 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடுவது 2019ஆம் ஆண்டிலேயே நிறுத்தம் - RBI
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள்களை அச்சிடுவது 2019ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள்கள் புழக்கத்துக்கு வந்தன.
இந்நிலையில், பாதுகாப்பு பிரச்சனை காரணமாக 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சிடுவது 2019ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் 2021 - 2022 நிதியாண்டில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Comments