டெல்லியில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - கெஜ்ரிவால் அறிவிப்பு

0 1840
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, டெல்லியில் முழு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, டெல்லியில் முழு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, டெல்லியில் ஏப்ரல் 19-ந் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக தினக்கூலிகளை கருத்தில் கொண்டு திங்கள் கிழமை முதல் கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்தால் தளர்வுகளை நிறுத்திவைக்கப்படும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments