கரும் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை அளிக்கச் சிறப்பு வார்டு அமைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

0 1542
கரும் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை அளிக்கச் சிறப்பு வார்டு அமைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

ரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பற்றி நாள்தோறும் அறிக்கை அளிக்கவும், சிகிச்சைக்கான மருந்துகள் இருப்புள்ளதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கரும் பூஞ்சை நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துத் தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரும் பூஞ்சை நோய்க்குச் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

நோய் கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். கரும் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் இருப்பைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை பற்றி நாள்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments