நிரம்பும் அரசு மருத்துவமனைகள்..! தடுப்பூசிக்கும் நிலவுகிறது தட்டுப்பாடு

0 1818
தமிழகம் முழுவதும் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில் நோயாளிகள் விரைவாக குணமடைந்து செல்வதால், படுக்கைகள் காலியாகி வருகின்றன. தடுப்பூசியை பொறுத்தவரை பல மாவட்டங்களில் தட்டுப்பாடே நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில் நோயாளிகள் விரைவாக குணமடைந்து செல்வதால், படுக்கைகள் காலியாகி வருகின்றன. தடுப்பூசியை பொறுத்தவரை பல மாவட்டங்களில் தட்டுப்பாடே நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட 220 படுக்கைகளும் 30 சாதாரண படுக்கைகளும் நிரம்பியதால் புதிதாக வரும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் விரைவாக குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள் இதனால் 2-வது நாளாக 35 படுக்கைகள் காலியாக உள்ளன. 12 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்சிசனை மாற்றும் பணியில் 8 பேர் கொண்ட மருத்துவ குழு ஈடுபட்டுள்ளதால், பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 460 ஆக்சிஜன் படுக்கைகள் உள நிலையில், 117 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கையிருப்பில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மொத்தம் 118 ஆக்சிஜன் படுக்கைகளும் 96 ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிருப்பில் உள்ளன.

மதுரையில் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் பலர் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாவட்டம் முழுவதிலும் 113தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்காணோர் ஒரே நேரத்தில் போதிய தனிநபர் இடைவெளியின்றி குவிந்தனர்.

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை குறைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள 47 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பலரும் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திச் செல்கின்றனர்.

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆகஸிஜன் இருப்பில் உள்ளதாக மருத்துவக்கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள 951 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பின. திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் அனுப்பர்பபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பபட்டு நோயளிகளை அனுப்ப மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 4 கொரோனா தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி இல்லாத காரணத்தால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 144 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 339ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments