தமிழகத்தில் சிகிச்சை இல்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மரணமடைந்ததாக எந்த புகாரும் இல்லை - உயர் நீதிமன்றம்

0 2436
தமிழகத்தில் சிகிச்சை இல்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மரணமடைந்ததாக எந்த புகாரும் இல்லை - உயர் நீதிமன்றம்

மிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை இல்லாமல் மரணமடைந்ததாக எந்தப் புகாரும் இல்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருவதாகவும், இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடக்கத்தில் படுக்கை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்த போதும், இப்போது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று பாதித்தவர் சிகிச்சையில்லாமல் உயிரிழந்ததாக எந்தப் புகாரும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments