நடமாடும் காய்கறி விற்பனையகங்களில் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்ய கட்டுப்பாட்டு மையம்

0 4977

சென்னையில் நடமாடும் காய்கறி விற்பனை மையங்களில் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்ய 4 பேர் அடங்கிய கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, சென்னையின் 15 மண்டலங்களிலும் நடமாடும் காய்கறி விற்பனை மையங்கள் மூலம் வீதி வீதியாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 4 பேர் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9499932899, 04445680200 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பெயர் அலைபேசி எண் மற்றும் விற்பனை செய்யும் இடம் உள்ளிட்ட  விவரங்களை அறிந்து கொள்ளலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments