30 நாள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்..!

0 3550

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.

வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக பரோல் அளிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார். அதன்படி புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

ஏற்கனவே இருமுறை பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன் 3வது முறையாக வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments