பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரம்..! மேலும் இரண்டு மாணவிகள் போலீசில் புகார்
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பத்மா ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவன் கைது செய்யப்பட்டான். இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணிற்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகாரளித்திருந்தனர்.
இந்த நிலையில், மேலும் 2 மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளிக்க முன்வந்துள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை வரும் திங்கள் கிழமையிலிருந்து 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
Comments