மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தொடர திட்டங்களை வகுக்க மத்திய அரசு உத்தரவு..! தேர்வை மையப்படுத்தும் கல்விமுறையை விட்டு விலக வலியுறுத்தல்
மாணவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்களை வகுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வை மையமாக வைத்தும் மதிப்பெண்களை மையமாக வைத்தும் இயங்கும் கல்வி முறையிலிருந்து மாணவர்களை விடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவிட் இரண்டாவது பேரலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பள்ளிகள் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் மாணவர்களின் கல்வி தொடர மத்திய கல்வித்துறை அமைச்சகம் சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
வீட்டில் உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை முன்னதாகவே விநியோகிக்குமாறும் , டிஜிட்டல் கருவிகள்,வீடியோக்கள் மூலம் புதிய பாட அசைன்மெண்ட்டுகளைக் கொடுத்து வாரம் தோறும் படிப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டிற்குத் தேவையான பயிற்சியுடன் மாணவர்களைத் தயார்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு கல்வி நிறுவனங்களில் உள்ள நூலகங்களில் இருந்து புத்தகங்களை வீடுதோறும் விநியோகிக்குமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.பேரிடர் காலத்தில் பாடங்களை வகுப்பறைகளுக்கு வெளியே இருந்து பயிற்றுவிக்க வேண்டும் என்றும் வகுப்பறை என்பது வெறும் சம்பிரதாயமான முறை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments