இன்று நடக்கிறது 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! கோவிட் மருத்துவ உபகரணங்களுக்கு வரிவிலக்கு குறித்து ஆலோசனை

0 1984
இன்று நடக்கிறது 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! கோவிட் மருத்துவ உபகரணங்களுக்கு வரிவிலக்கு குறித்து ஆலோசனை

43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

தடுப்பூசி, ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட கோவிட் நிவாரணப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிச் சலுகை உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதன்பின், 6 மாதங்களுக்கு பிறகு இந்தக் கூட்டம் நடைபெறுவதால் ஜிஎஸ்டி வரம்பு, இழப்பீடு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments