ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு..! யாஸ் புயல் சேத விவரங்களை நேரில் பார்வையிடுகிறார்
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று ஒடிசா மற்றும் மேற்குவங்காளம் செல்கிறார்.
அப்போது இரு மாநிலங்களிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டரில் பயணம் செய்து பார்வையிடுகிறார். இந்த ஆய்வுக்கு பின்னர் புயல் பாதிப்பு நிவாரண உதவிகளை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு அருகே கரை கடந்தது. இந்த புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
Comments