எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..
சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் 4268 பேருக்கு கொரோனா உறுதியானது. இதே போல் திருப்பூரில் 1880 பேருக்கும், மதுரையில் 1538 பேருக்கும், திருச்சியில் 1775 பேருக்கும், , ஈரோட்டில் 1642 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையாலும் பெரும்பாலோனர் வெளியூர் சென்றுவிட்டதாலும் கொரோனா குறையத் தொடங்கியுள்ளது.
அதே சமயம் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அதிகம் பின்பற்றாத காரணத்தினால் தான் அங்கு கொரோனா அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆறு மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
Comments