வியூஸ்காக வெளியிட்ட வீடியோவால் விபரீதம்..! ஹீலியம் பலூன்களுடன் நாயை கட்டி பறக்கவிட்ட யூடியூபர் கைது
டெல்லியில் ஹீலியம் பலூனில் வளர்ப்பு நாயை கட்டி பறக்கவிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபாரான கெளரவ், தன் யூடியூப் பக்கத்தை பின்தொடரும் பார்வையாளர்களை கவருவதற்காக "பறக்கும் நாய்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் தனது வளர்ப்பு நாயை ஹீலியம் பலூன்களில் கட்டி கட்டடங்களுக்கு மத்தியில் பறக்கவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, வியூஸ்காக(views)நாயை வதை செய்வதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் செல்லப்பிராணியை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள கெளரவ், இச்செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். உரிய பாதுகாப்பு வசதிகளுடனே நாயை பறக்கவிட்டதாகவும், யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னித்துவிடும்படியும் கெளரவ் கேட்டுக்கொண்டுள்ளார்
Comments