ரேசன் கடைகளுக்கு பருப்பு, சமையல் எண்ணெய் டெண்டருக்கு விதித்த தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
பொது வழங்கல் திட்டத்துக்குப் பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதித்த தடையை நீக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும் என முன்பு நிபந்தனை இருந்ததாகவும், இப்போது கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் விற்றுமுதல் இருந்தால் போதும் எனப் புதிய நிபந்தனைகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த நிலையில் தடையை நீக்கக் கோரித் தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது நீதிபதிகள் மதுரைக் கிளையைத் தான் அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் மக்களுக்குப் பருப்பு, எண்ணெய் வழங்க வேண்டியுள்ளதாகவும், தடை விதித்த நீதிபதி தலைமையில் தான் மதுரைக் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
Comments