சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீ தொலைவில் மஞ்சள் கோடுகளை வரைய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு
சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறு சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மஞ்சள் கோட்டையும் தாண்டி வாகனங்கள் வரிசை பிடித்து நின்றால், அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட 100 மீட்டருக்குள் மட்டுமே வாகன வரிசை நீண்டால் சுங்க கட்டணம் வசூலிக்க தடை ஏதும் இல்லை.
அதைப் போன்று சுங்கச்சாவடியை கடக்கவும், சுங்கச்சாவடி தடைக்கம்பியை உயர்த்தவும் 10 விநாடிகளுக்கு அதிகமாக நேரம் எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், இது போன்ற தருணங்களில் வாகனங்களை இலவசமாக கடக்க அனுமதித்தால், பாஸ்டேக்கில் இருந்து பணம் வசூலிக்கப்படாமல் இருக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாஸ்டேக் என்பது தானியங்கி முறையில் இயங்குவதால், இந்த 100 மீட்டர் இலவச விவகாரத்தை ஐ.டி. தொழில்நுட்பத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என டோல்கேட் முறை குறித்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments