போக்குவரத்துக் கழக ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் -முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

0 3455
போக்குவரத்துக் கழக ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் -முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மிழக அரசு போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்திலும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள் என்றும் அவர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பதோடு, அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டினை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments