ஜார்க்கண்டில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் சென்னை வருகை
ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ஏற்றிய ரயில் நேற்றிரவு சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் டேங்குகளிலும், லாரிகள் மூலமாகவும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ என்ற இடத்தில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கண்டெய்னர் சரக்கு ரயில் நேற்றிரவு சென்னை திருவொற்றியூர் கான்கார் கண்டெய்னர் யார்டுக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து ஆக்சிஜன் லாரிகள் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
Comments