”இந்தியாவில் கொரோனாவால் 16 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம்” -நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வில் தகவல்

0 3390
”இந்தியாவில் கொரோனாவால் 16 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம்” -நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வில் தகவல்

ந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் சுமார் 16 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிகழ்ந்த பாதிப்புகள் மற்றும் இறப்புகளை ஆராய்ந்த பின்னர் இந்த எண்ணிக்கை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் கயோகோ ஷியோடா என்பவரின் கூற்றுப்படி, மருத்துவமனைகளை விட வீட்டிலேயே அதிக கொரோனா மரணங்கள் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிராமப்புறங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments