கொரோனாவில் இருந்து தப்பிக்க வழி சொல்லும் சிங்கப்பூர் தமிழச்சி...!
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் மருத்துவ மாணவி ஒருவர், கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வீடியோ பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பெண்ணான ஹிரண்யா. அங்குள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி திரட்டி காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கச் சொல்லி அனுப்பி வைத்திருந்தார். இந்த இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அரசு மருத்துவமனைக்கு அர்ப்பணித்தார்.
இதன் தொடர்ச்சியாக மாணவி ஹிரண்யா, தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை பாடலாகப் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
வீட்டுக்குள் இருப்பதே இப்போதைக்கு பாதுகாப்பு என்றும் அரசு சொல்லும் விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பரவலை தடுப்பதோடு கொரோனாவில் இருந்தும் தப்பிக்கலாம் என்கிறார் மாணவி ஹிரண்யா
Comments