அதென்ன குறு குறுன்னு பார்வை..? மனைவியின் தலையில் 'நச்'... பால் வியாபாரி கொடூரம்.!

0 28589

ணவனுடன் சண்டையிட்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று வந்ததால், நடத்தையில் சந்தேகப்பட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்ததாக பால்வியாபாரியை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பால்வியாபரி பாபு. இவரது மனைவி ரதிகலா இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். உறவினர்களிடம் சிரித்தமுகத்துடன் பழகும் மனைவியின் குணம் பாபுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் ரதிகலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. கணவனின் நடவடிக்கையால் அதிருப்தி அடிந்த ரதிகலா சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளார். ஒருவேளை தனது மனைவிக்கு சென்னையில் ஆண் நண்பர்கள் யாராவது இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு சென்னைக்கு சென்று தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் பாபு.

ஒரு கட்டத்தில் ரதிகலா தெருவில் செல்லும் யாரையாவது பார்த்தால் கூட ஏன் குறு குறுன்னு பார்க்கிறாய் அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு எனக் கேட்டு கண்டித்துள்ளார். இதே போல் புதன்கிழமை அதிகாலையும் பால் கறப்பதற்காக எழுந்த கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்ட்டுள்ளது. பின்னர் படுக்கைக்கு சென்ற ரதிகலா, தூங்க தொடங்கியுள்ளார்.

அப்போது பாபு , தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மனைவி ரதிகலா தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார், இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரதிகலாவின் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரதிகலாவை கொலை செய்த அவரது கணவர் பாபுவை போலீசார் கைது செய்தனர். மனைவியின் பார்வை அலைபாய்ந்ததால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக பால்வியாபரி பாபு வாக்குமூலம் அளித்துள்ளார். உண்மையில் செல்போன் கூட பயன்படுத்தாத ரதிகலாவுக்கு எவருடனும் தவறான தொடர்பு இல்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் பார்க்கும் போது அழகான பெண் வேண்டும் என்று தேடவேண்டியது , திருமணத்திற்கு பின்னர் தன்னை விட மனைவி அழகாக இருக்கிறாள் என்று சந்தேகத்தீயால் அவளை துன்புறுத்தி வார்த்தைகளால் சுடும் சந்தேகன்களை விட்டு ஆரம்பத்திலேயே விலகுவது நலம் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments