கலங்க வைக்கும் கறுப்பு பூஞ்சை..! இந்தியாவில் பரவ காரணங்கள் என்ன?
இந்தியர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அது கொரோனா காலகட்டத்தில் முறையாக கட்டுக்குள் வைக்கப்படாமல் இருப்பதும் கறுப்பு பூஞ்சை பரவ ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கொரோனா சிகிச்சையில், ஸ்டீராய்டு மருந்துகளை தேவைக்கு அதிகமாக அளிப்பதும், நோய் எதிர்ப்புத் திறனை குறைக்க கூடிய டோசிலிசுமாப் போன்ற மருந்துகளை கொடுப்பது போன்றவையும் மற்றோர் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பரவும் B.1.617 மரபணு மாற்ற வைராசானது நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனை குறைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது.
தரமற்ற ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தினாலும் பூஞ்சை தொற்று வருமா என்ற ஐயம் உள்ளது. நோயாளிகளால் திணறும் மருத்துவமனைகள், சுகாதாரமில்லாத முக கவசங்கள், தரமில்லா ஆக்சிஜன் கருவிகள் ஆகியனவும், இந்தியாவில் கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரிக்க காரணமாக இருக்க கூடும் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments