ஒரே நபருக்கு வெவ்வேறு டோஸ் தடுப்பூசி செலுத்திய அதிகாரிகள்..! உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

0 5443

த்தரபிரதேச அரசு மருத்துவமனையில் ஒரே நபருக்கு இரண்டு வெவ்வேறு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள 20 கிராம மக்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் நாளில் முதல் டோசாக கோவிஷீல்டு தடுப்பூசியும், 2வது டோஸ் தடுப்பூசியாக மே மாத இடையில் கோவாக்சினும் போடப்பட்டுள்ளது.

இரண்டு வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகளை கலந்து போடுவதின் செயல்திறன், அதன் தாக்கம் குறித்து உலகளவில் ஆய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

இரண்டு வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகளை கலந்து போடுமாறு மத்திய அரசும் அறிவுறுத்தவில்லை. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் இதுபோன்று இரண்டு வெவ்வேறு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் நலமாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments