தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 256 பேர் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 256 பேர் பாதிக்கபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை தமிழகத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள எனவும், இதுவரை இல்லாத அளவாக செவ்வாயன்று ஒரே நாளில் மட்டும் 2லட்சத்து 53ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு பின் பேசிய அவர், கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை மருத்துவ வல்லுனர்களுடன் சுகாதாரத்துறை ஆலோசனை நடத்துகிறது என்றார்.
மத்திய அரசிடம் இருந்து கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்து 600 குப்பிகள் பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதல் மருந்தும் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments