சமூக ஊடகங்களுக்கு நெருக்கடியா? :உள்ளடக்கம் மற்றும் பதிவுகள் குறித்த சட்டபூர்வ பாதுகாப்பை இழக்கும் சமூக ஊடகங்கள்..!

0 3734
சமூக ஊடகங்களுக்கு நெருக்கடியா? :உள்ளடக்கம் மற்றும் பதிவுகள் குறித்த சட்டபூர்வ பாதுகாப்பை இழக்கும் சமூக ஊடகங்கள்..!

யனர்கள் பதிவேற்றம் செய்யும் உள்ளடக்கம் தொடர்பாக, ஃபேஸ்புக், டுவிட்டர், யுடியூப், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த சட்டபூர்வ பாதுகாப்பு இன்று முதல் விலக்கப்படுகிறது.

இனிமுதல் இந்த ஊடகங்களில் வெளியாகும் தகவல்களுக்கு, இந்த நிறுவனங்கள் பதில் அளித்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல், தங்களது கவனத்திற்கு வரும் சட்டவிரோத உள்ளடக்கங்களை தாமாகவே அகற்ற வேண்டும். இல்லையெனில் சட்டவிரோத பதிவுகளுக்காக இவற்றின் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைள் எடுக்கப்படலாம்.

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய டிஜிட்டல் விதிகளை மத்திய அரசு அறிவித்து அவற்றை நிறைவேற்ற 3 மாத கால அவகாசமும் வழங்கியது. இந்த அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்றால், சட்ட ரீதியாக தங்களது ஊழியர்களை பாதுகாக்கவும், இந்தியாவில் தங்களது செயல்பாட்டை தொடரவும் இந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எனினும் அரசுடன் ஆக்கபூர்வமான பேசி ஒரு தீர்வை எட்ட தங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளதாகவும், தேவைப்பட்டால் பின்னர் நீதிமன்றங்களையும் அணுகுவோம் எனவும் டிஜிட்டல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments