ஆண்டுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலும்: இந்திய வக்கார்ட் மருந்து நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல்

0 2629
ஆண்டுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலும்: இந்திய வக்கார்ட் மருந்து நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல்

ண்டொன்றுக்கு 200 கோடி தடுப்பூசி டோசுகளை தங்களால் தயாரிக்க முடியும் என இந்திய மருந்து நிறுவனமான வக்கார்ட், மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் 50 கோடி டோசுகளை தயாரிக்க இயலும் எனவும் அது தெரிவித்துள்ளது. மத்திய அரசிடம் இந்த மாத துவக்கத்தில் இதை தெரிவித்துள்ள வக்கார்ட் நிறுவனம், யாருடைய தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும் என தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

mRNA, புரோட்டீன் மற்றும் வைரஸ் திசு அடிப்படையிலான தடுப்பூசியை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் தங்களிடம் இருப்பதாகவும் வக்கார்ட் தெரிவித்துள்ளது. வக்கார்ட் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments