இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு கப்பலில் பயங்கர தீ... நெருப்பை அணைக்கும் பணியில் 3 இந்தியக் கப்பல்கள்

0 3122

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நெருப்பு பற்றி எரியும் சரக்குக் கப்பலின் நெருப்பை அணைக்கும் பணியில் 3 இந்தியக் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

சிங்கப்பூரைச் சேர்ந்த எம் வி எக்ஸ்ப்ரஸ் பியர்ல் என்ற சரக்குக் கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. ஆயிரத்து 486 கன்டெய்னர்கள் உள்ள இந்தக் கப்பலில் 25 டன் நைட்ரிக் அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பலில் வைக்கப்பட்டிருந்த ரசாயன பொருட்கள் தீப்பற்றியதால் கரும் புகையுடன் நெருப்பு கொளுந்து விட்டு எரிகிறது.

இந்தக் கப்பலின் ஒருபுறத்தில் ஏராளமான எரிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நெருப்பு பற்றும் முன் அணைத்துவிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கப்பலில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் பணியில் இலங்கைக்கு உதவி இந்தியாவின் வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரபிரஹரி ஆகிய 3 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments