யாஸ் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க இரவு தலைமை செயலகத்தில் தங்க மம்தா முடிவு..!
யாஸ் புயல் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க இரவு தலைமை செயலகத்திலேயே தங்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை ஒடிஷா - மேற்கு வங்கம் இடையே யாஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மணிக்கு 185 கிலோ மீட்டரில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய ஆம்பன் புயலை காட்டிலும் யாஸ் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, தேசிய பேரிடர் மீட்பு படையினருடன், 2 லட்சம் போலீசார் மற்றும் 54,000 அதிகாரிகள் மற்றும் நிவாரண பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் இதனை தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments