16 வயசு சிறுமியை சீரழித்து தாயாக்கிய.. 75 வயது காமுகன்..! குழந்தையை விற்க முயன்று சிக்கினான்

0 56762
16 வயசு சிறுமியை சீரழித்து தாயாக்கிய.. 75 வயது காமுகன்..! குழந்தையை விற்க முயன்று சிக்கினான்

பலாத்காரம் செய்த 16 வயது ஏழைச்சிறுமியையும் அவளது குடும்பத்தையும் தனது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த 75 வயது காமுகன், கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தையை விற்பதற்காக வெளியே எடுத்துச்சென்ற போது போலீசில் சிக்கியுள்ளான். காலம் போன காலத்தில் போக்சோவில் கைதாகி கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த 75 வயதான அன்வர் என்பவர் பச்சிளம் ஆண்குழந்தையுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் ராணிபேட்டை மகளிர் போலீசாரிடம் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசி போலீசில் சிக்கிக் கொண்டார், தனது பேத்திக்கு பிறந்த குழந்தையை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக முதலில் கூறியவர், அந்த குழந்தையை விற்பதற்கு ஒருவருடன் பேரம் பேசிய தகவல் வெளியானவுடன் அந்த குழந்தை குறித்த முழு விவரங்களை சேகரித்த போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

பழைய பிளாஸ்டிக் சேகரித்து விற்கும் தொழில் செய்து வந்த அன்வர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது வீட்டுப்பக்கம் வந்த 16 வயது ஏழைச் சிறுமியை ஏமாற்றியும் மிரட்டியும் பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுமியையும் அவளது குடும்பத்தினரையும் மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அன்வர், போலீசில் புகார் ஏதும் கொடுக்கவிடாமல் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சிறுமிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை எடுத்துச்சென்று விற்றுவிட்டால் அந்த சிறுமியோ அல்லது அவளது குடும்பத்தினரோ போலீசில் புகார் ஏதும் கொடுக்க ஆதாரம் ஏதும் இருக்காது என்று திட்டமிட்டு பச்சிளம் குழந்தையை எடுத்துச்சென்று விற்க ஒருவருடன் பேரம் பேசியது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து 75 வயது காமுகன் அன்வரின் வீட்டில் இருந்த 16 வயது சிறுமியையும், அவளது தாயையும் மீட்ட போலீசார் அவர்களிடம் புகாரை பெற்று அன்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காலம் போன காலத்தில் அன்வர் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டான். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை சிறுமியின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளி மாணவிகளோ, சிறுமிகளோ தங்களுக்கு பாலியல் ரீதியாக அத்துமீறும் காமுகர்கள் மீது உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100க்குகோ அல்லது குழந்தைகள் உதவி மையத்தையோ அனுகலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments