கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் WHO அங்கீகாரம் கிடைக்கும்- பாரத் பயோடெக் நம்பிக்கை
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என அதன் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
WHO மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், அயர்லாந்து ஆகிய நாடுகளும் இதுவரை கோவேக்சினுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. தங்களது நாடுகள் மற்றும் WHO வின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளை போட்டவர்களுக்கு மட்டுமே உலகின் முக்கிய பல்கலைக்கழகங்கள் அனுமதி அளிக்கின்றன.இதனால் அந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு கோவேக்சினால் எந்த பயனும் இருக்காது என்ற நிலைமையே உள்ளது.
கோவேக்சின் குறித்த கூடுதல் தரவுகளை தாக்கல் செய்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என WHO திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
90 சதவிகித ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டதாகவும், எஞ்சியவை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் கிடைக்கும் எனவும் பாரத் பயோடெக் நம்பிக்கையுடன் உள்ளது.
Comments