தி பேமிலி மேன்-2 தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாது :தொடரின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் ட்விட்டர் பதிவு

0 3901
தி பேமிலி மேன்-2 தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாது -தொடரின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் ட்விட்டர் பதிவு

தி ஃபேமிலி மேன் இரண்டாம் பாகம் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தாத விதத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக நாயகன் மனோஜ் பாஜ்பாய் (Manoj Bajpayee ) தெரிவித்துள்ளார்.

அமேசான் ஒடிடி-யில் வெளியாக உள்ள பேமிலி மேன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை இழிவு படுத்தும் விதத்தில் உள்ளதாக பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அந்தத் தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதினார்.

டிரைலரில் வரும் ஓரிரு காட்சிகளை வைத்து பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மனோஜ் பாஜ்பாய், தொடரின் திரைக்கதையை எழுதுவதில் தமிழர்களே முக்கிய பங்காற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தை படக்குழுவினர் அதிகம் மதிப்பதாகவும், பாரபட்சமற்ற முறையில் படமாக்கப்பட்டுள்ளதால் தொடரை பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments