ஆன்டிகுவாவில் மாயமான மெகுல் சோக்சி கியூபாவுக்கு தப்பி ஓட்டம்?

0 1967
ஆன்டிகுவாவில் இருந்து மாயமான வைரவியாபாரி மெகுல் சோக்சி, கியூபாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆன்டிகுவாவில் இருந்து மாயமான வைரவியாபாரி மெகுல் சோக்சி, கியூபாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

12 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியும் அவரது உறவினரான மெகுல் சோக்சியும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் மெகுல் சோக்சி, பெரிய அளவு பணத்தை முதலீடு செய்து ஆன்டிகுவா குடியுரிமை பெற்றார்.

ஆனாலும் அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுனி, நேற்று பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசினார். இந்த நிலையில் இந்தியாவுக்கும் கியூபாவுக்கும் இடையே குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் இல்லை என்பதால், மெகுல் சோக்சி கியூபாவுக்கு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments