இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு அதிகபட்ச முன்னுரிமை-வாட்ஸ்ஆப்

0 3777
இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு  அதிகபட்ச முன்னுரிமை அளிப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

பயனர்களின் தரவுகளை வர்த்தக நோக்கில் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, வாட்ஸ்ஆப்-ன் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது. இந்த நிலையில்  திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை வாபஸ் பெறுமாறு ஐ.டி. அமைச்சகம் கடந்த 18 ஆம் தேதி வாட்ஸ்ஆப்புக்கு கடிதம் அனுப்பியது. இல்லையெனில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள வாட்ஸ்ஆப் நிர்வாகம், திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளால், பயனர்களின் தனிநபர் தகவல்களின் ரகசியம் பறிபோகாது என தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை ஏற்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படாது என்றும், அதே நேரம்  அது குறித்து பயனர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படும் எனவும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments